News

விஜய்க்கு ஆக்‌ஷன் படம்தான் பண்ணுவேன் – சுதா கொங்கரா !

Published

on

இயக்குநர் Sudha Kongara இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சமீபத்தில் பல தேசிய விருதுகளை வென்று குவித்தது.

தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா. இப்படத்தை முடித்தவுடன் மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றுல் இவரின் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதாவது விஜய்யுடன் இணையும் வாய்ப்பு எதுவும் இருக்கின்றதா ? அதை நாங்கள் எதிர்பார்க்கலாமா ? என்ற கேள்வி.

இதற்கு பதிலளித்த சுதா கொங்கரா ‘நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான் கதை சொல்லி அது அவருக்கு பிடித்து கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக இந்த கூட்டணி அமையும். எனக்கு விஜய்யின் ஆக்‌ஷன் மற்றும் டான்ஸ் மிகவும் எனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version