Connect with us
 

News

நான் பீஸ்ட் படம் பார்ப்பேன் என் படமும் பார்ப்பேன் – யஷ் !

Published

on

கேஜிஎப் – 2 பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது கேஜிஎப்-2 மற்றும் பீஸ்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து நாளில் வெளியாவது குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய யஷ் கேஜிஎப் Vs பீஸ்ட் என்று சொல்லாதீர்கள் கேஜிஎப் மற்றும் பீஸ்ட் என்று சொல்லுங்கள். ஏனென்றால் இது ஒன்றும் தேர்தல் கிடையாது. தேர்தலில்தான் ஒருவர் வென்றால் மற்றும் ஒருவர் தோற்கவேண்டும். விஜய் மிகப்பெரிய நடிகர். பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

கண்டிப்பாக நான் பீஸ்ட் படத்தை பார்ப்பேன் என் படத்தையும் பார்ப்பேன். இரண்டு படங்களையும் கொண்டாடுவோம் என்று கூறினார். இந்த பேச்சு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.