News
விஜய் போல நடனம் ஆட முடியுமா என நினச்சிருக்கன் – வசந்த் ரவி !
நடிகர் வசந்த் ரவி வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான இவர் தான் நடிக்கும் படங்களை பார்த்து பார்த்து வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது குறிப்பாக இவரின் நடிப்பு தனித்து தெரிந்தது. அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் ASVINS திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது.
இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரின் அந்த நடிப்பு இன்று அனைவராலும் பேசப்படுகிறது. என்ன வேடம் கொடுத்தாலும் அதை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமே அந்த அளவுக்கு சிறப்பாகவும் மேலும் இது போன்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் கூறியதாவது.
நான் நம்ம ஊர்லதான் தமிழ் மொழியில்தான் முதலில் படம் நடிக்கனும். அதனால நிறைய தமிழ் படங்கள் பார்த்தேன் அப்பிடி பார்க்கும் போது ஒரு சில ஹீரோக்களை மட்டும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். காரணம் அவங்க நடிப்பு அந்த அளவுக்கு இருக்கும் சில சமயங்களில் நானே ஜயோ என்னப்பா இப்பிடி நடிக்கிறாங்க அப்பிடின்னு நினைத்தது கூட உண்டு.
அது போல எனக்கு ஒரு ஒரு ஹீரோவோட நடிப்பும் ரொம்ப பிடிக்கும் குறிப்பாக சொல்லனும்னா கமல் சார் அவரோட சில படங்கள் பார்த்து நான் வியந்து போயிருக்கிறன். அதுபோல விஜய் சாரோட நடனம், ரஜினி சாரோட screen Presence. ரஜினி சார் திரையில் தோன்றினாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவாங்க எப்பிடி அதெல்லாம் முடியுது அப்பிடின்னு தோனும்.
என் அடுத்தடுத்து படங்களில் சற்று வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் ஒரே மாதிரியான வேடங்கள் இல்லாமல் நான் அடுத்து நடிக்கும் படத்தில் கொஞ்சம் நடனம் ஆடியுள்ளேன் நடனம் ஆடுவது கஷ்டம்தான் ஆனாலும் எனக்கு அது பிடித்துள்ளது என்று கூறினார்.