News

விஜய் மற்றும் அஜித் படங்களை இயக்க நான் தயார் – பார்த்திபன் !

Published

on

Parthiban இயக்கி நடித்து தயாரித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். கடந்த வெள்ளிகிழமை வெளியாகவிருந்த திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் அடுத்த மாதம் வெளியாகிறது.

இப்படத்தில் பார்த்திபனுடன் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

தற்போது இப்படத்தின் விளம்பர நிகச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பார்த்திபன் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருகிறது என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய பார்த்திபனிடம் சில வருடங்களாக உதவி இயக்குநராக இருந்தர்வகளே விஜய், அஜித் படம் இயக்கும் போது நீங்கள் ஏன் இயக்கவில்லை என்ற ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன் தவறு என்மீதுதான் அவர்களிடம் சென்று நான் வாய்ப்பு கேட்க்கவில்லை.

விஜய் மற்றும் அஜித் என் இயக்கத்தில் நடிக்க தயாராக இருந்தால் ஒரு ஒருவருக்கும் தலா 5 கதைகள் சொல்வேன். அதில் அவர்களுக்கு பிடித்த கதையில் நடிக்கலாம். ஷங்கர் இயக்கிய 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கை நான் தான் முதலில் இயக்கவிருந்தேன் ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை இனி வரும் காலங்களில் கண்டிப்பாக நடக்கும்.

Trending

Exit mobile version