Connect with us
 

News

எனது பயோபிக் எடுத்தால் என் ஃபேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்க வேண்டும் !

Published

on

சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள் அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, குத்துச் சண்டை வீராங்கனை மேரிகேம், பாட்மிண்டன் வீராங்களை சாய்னா நேவல் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வெற்றியும் கண்டன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு தொகுப்பாளரிடம் கல்ந்துரையாடினார்.

அப்போது பேசிய சுரேஷ் ரெய்னாவிடம் உங்கள் பயோபிக் எடுப்பதாகவிருந்தால் யார் நடிக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ரெய்னா தென்னிந்தியாவில் எனது பயோபிக் எடுத்தால் என் ஃபேவரைட் ஹீரோ சூர்யாதான் அவரால் மட்டும்தான் என் படத்தை அற்புதமாக நடிக்க முடியும் என்று கூறினார்.