News

கமல் கட்சி வெற்றி பெற்று இருந்தால் இவர்கள் எல்லாம் விலகிருப்பார்களா?

Published

on

நடந்து முடிந்த சட்டசபி நேர்தலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதீப ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தார். இது மட்டுமின்றி இவர் கட்சி சார்ப்பில் போட்டியிட்ட அனைவருமே தோழ்வி அடைந்தனர்.

இந்த தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகினர். மகேந்திரன், சந்தோஷ் பாபு, மற்றும் பத்ம பிரியா ஆகியோர் அந்த கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி பலர் இக்கட்சியிலிருந்து வெளியேறிவர்களை பற்றி நடிகை சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறியது: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் தற்போது கட்சியில் இருந்து விலகும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் இப்படி செய்திருப்பீர்களா? என்று சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை, அவரின் தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.

Trending

Exit mobile version