Connect with us
 

News

விஜய் ஓகே சொன்னால் நான் தயார் – கமல்ஹாசன் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’ இப்படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. அதில் கமல்ஹாசனின் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தளபதி விஜய் விக்ரம் 3-ம் பாகத்தில் நடிப்பாரா? என்று அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் விக்ரம் 3-ம் படத்திற்காக ஏற்கனவே ஒருவரை ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஆனால் விஜய் ஒப்புக்கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க உள்ளோம் என்று கூறினார்.