News

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !

Published

on

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.

வருட வருட நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது நிகழ்சி இந்த வருடம் அபுதாமியில் உள்ள யாச் தீவில் கடந்த 26, 27 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்கினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மன், சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல முன்னனி திரைப்பிலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச IIFA சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருதினை அவருக்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதினை கமல்ஹாசனுக்கு வழங்கி கெளரவித்தார். அப்போது சல்மான் கான் உட்பட அனைவருமே எழுந்து நின்று நீண்ட நேரம் கைதடி கமல்ஹாசனை உற்காசப்படுத்தினர்.

Trending

Exit mobile version