News
என் காதலை சொல்ல எனக்கு பயம் இல்லை – ரகுல் ப்ரீத் சிங் !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தி படங்களில் அதிக கவன செலுத்தி வருகிறார்.இவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பஹ்னானியை இவர் காதலித்து வருகிறார். இந்த காதல் பற்றி ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில்.
‘சிலர் தங்கள் காதலை சொல்லாமல் இருப்பது அவர்களின் விருப்பம். நான் எனது காதலை வெளிப்படுத்தினேன். சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி நடிக்க மாட்டேன். உண்மையாக இருக்க நான் விரும்பிகிறேன்.
வாழ்வில் துணை முக்கியம் நானும் ஜாக்கியும் ஒருமித்த கருத்தோடு உள்ளோம். பயம் காரணமாக சில விஷயங்களை சிலர் மறைத்து சிக்கலுக்கு ஆளாகின்றனர். எனக்கு பயமில்லாததால் என் காதலை மறைக்கவில்லை என்று கூறினார்.