News
இலவச பள்ளிக்கூடம் கட்டுவது விஜய்தானா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது பிரம்மாணமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் இப்படத்தை நெல்சன் திலீப் இயக்குகிறார்.
இந்த நிலையில் தற்போது விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுகிறார் என்ற தகவல் வெளியானது. அதை விசாரித்த போது பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல அவருடைய உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான பிரிட்டோ என்பது தெரியவந்துள்ளது.
பிரிட்டோ அவர்களுக்கு ஏற்கனவே ஒரு கல்லூரியும் ஒரு பள்ளிக்கூடமும் இருக்கிறது. தற்போது திருப்போரூரில் இரண்டாவது பள்ளிக்கூடம் கட்டுகிறார்.
இந்த பள்ளிக்கூட கட்டுமான பணிகளை சமீபத்தில் விஜய் நேரில் சென்று சுற்றுப்பார்த்தார். உடனே ரசிகர்கள் விஜய்தான் அந்த பள்ளிக்கூடத்தை கட்டி வருகிறார் என்று வதந்தியை பரப்பி விட்டார்கள் என்கிறார் பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்.