News
என் இயக்கத்தில் விஜய் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில்தான் நடிப்பார் – மிஷ்கின் தகவல் !

இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என அனைத்து படங்களுமே வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாகவிருக்கும். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மிஷ்கின் தற்போது பிசாசு இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இயக்குனர் மிஷ்கின் டுவிட்டர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஸ்பேஸ் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால் அவரை எந்த வேடத்தில் நடிக்க வைப்பீர்கள் என்று ஒரு கேள்வி கேட்க.
அதற்கு பதில் கூறிய மிஷ்கின் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாதிரம் கொடுப்பேன் என்று பதில் கூறினார். தமிழ் சினிமாவில் அவரை விட்டால் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் வேறு யாருமில்லை என்றும் கூறினார்.