News
இறுதிக்கட்டத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு !

சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாநாடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிலம்பரசன் முத்து என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருந்தெந்தூரில் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சென்னையிலும் பின்னர் மும்பையிலும் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது படக்குழு. அதில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கவிருப்பதாகவும் இப்படத்தில் விம்புவின் ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
நடிகை சித்தி இத்னாலி பாவை என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டது. சித்தி இத்னானி தெலுங்கில் ஒரு சில படங்களும் குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இது இவர் நடிக்கும் அறிமுக படமாகும்.