News
இந்தியன் 2 வெளியீட்டு தேதி வெளியானது !

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமாக்கிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தியன் 2 படம் வருகிற மே 30ம் தேதி திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.