News

மே 24ம் தேதி திரைக்கு வரும் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2?

Published

on

சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளியானது.

இந்தியன் 2 படத்தில் கமஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னொரு பக்கம் இந்தியன் 3 படத்தின் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த நிலையில் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளும் மே 24ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version