Reviews
இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம் !
Cast: Santhanam, Priyalaya, Thambi Ramaiah, Vivek Prasanna, Bala Saravanan, Munishkanth, Attul, Maaran, Seshu, Swaminathan, Cool Suresh, Manobala
Production: Gopuram Films
Director:Anand Narayan.
Screenplay: Ezhichur Aravindan
Cinematography: OM Narayan
Editing:M. Thiyagarajan
Music:D.Imman
Language: Tamil
Runtime: 2H 12 Mins
Release Date:17 May 2024
இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. சிம்பிள் கதையை எடுத்து இரண்டு மணி நேரம் நம்மை சிரிக்க வைக்கிறார்.
சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரதவாத கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கிறது. குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா சந்தானம் வீட்டில் கரண்ட் ஷாக் அடிக்க காப்பாற்ற நினைத்து அவனை கொலை செய்து விடுகிறது சந்தானம் குடும்பம். எப்படியாவது அந்த பிணத்தை அகற்ற வேண்டும் என நினைத்து அகற்றி விட்டு வீடு திரும்புகிறது. வீட்டிற்குள் வந்து பார்த்தால் உள்ளே விவேக் பிரசன்னா உயிரோடு உட்கார்ந்து இருக்கிறார். அந்த சமயம் தொலைக்காட்சியில் விவேக் பிரசன்னா பற்றி செய்தி வருகிறது அதாவது விவேக் பிரசன்னா மிகப்பெரிய தீவிரவாதி என்றும் இவரை பிடித்து கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு தொகை என காவல் துறை அறிவிப்பு விடுக்கிறது. இப்போது உயிரோடு இருக்கும் விவேக் பிரசன்னா சந்தானத்தின் நண்பர் 50 லட்சம் பணத்திற்காக தீவிரவாதி விவேக் பிரசன்னா பிணத்தை மருத்துவமனையிலிருந்து திருடி போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்து அந்த 50 லட்சம் பணத்தை பெற திட்டமிடுகிறார்கள் இதில் வெற்றியடைத்தார்களா இல்லையா என்பது படத்தின் மிதிக்கதை.
சந்தானம் வழக்கம் போல தன் நடிப்பால் மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார். அதே ஒன் லைன் நகைச்சுவை படம் முழுவதும் தந்து ரசிக்க வைக்கிறார். தம்பி ராமையா மற்றும் பால சரவணனின் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடங்களில் தன் உடல் முழியால் கலகலப்பூட்டுகிறார்.
அறிமுக நடிகை பிரியாலயா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மற்றும் தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனன்.
டி.இமானின் இசையில் மாயோனே பாடல் மனதை உறங்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்க வில்லை. பின்னணி இசையிலும் ரசிக்க வைக்கிறார். ஓம்.பிரகாஷ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. தியாகராஜனின் படத்தொகுப்பில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம்.
மொத்ததில் ‘இங்க நான்தான் கிங்கு ‘ சில நல்ல காமெடிகளை ரசிக்க பல காட்சிகளில் பொறுமை காக்க வேண்டும்.
Rating : 3.25/5