Connect with us
 

English

இரவின் நிழல் – விமர்சனம் !

Published

on

Movie Details

சினிமாவில் வித்தியாசமான எதும் எடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு கலைஞர் ஆர்.பார்த்திபன். அப்படி உலக சினிமாவில் யாரும் இது வரைக்கும் செய்யாத ஒரு முயற்சி இந்தப் படம் ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த Iravin Nizhal.

படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த படம் எப்படி எடுத்தார்கள் என்று மேக்கிங் படம் 30 நிமிடங்கள் போட்டு காட்டி விடுகிறார். படத்தின் பெயரிலேயே பார்த்திபன் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்து விட்டார்.

மேக்கிங் படத்தில் அவருடைய இப்படத்திற்கு கடும் உழைப்பும் படக்குழுவினரும் ஒத்துழைப்பும் தெரிகிறது. கதையும் நந்து என்ற அவரது கதாப்பத்திரமும் துணிச்சலாக இருந்தது. ஒரு மனிதனின் பிறப்பும் வளர்ப்பும் சரியாக இருந்தால் ஒழுக்கமான வாழ்க்கை அமையும். இல்லையென்றால் நந்துவுக்கு நிகழும் வேதனைகள் மிகுந்த சோதனையான வாழ்க்கையே அமையும் என்பதுதான் படத்தின் மையக்கரு.

நந்து ஒரு விலைமாதுவின் மகன் நிர்வாணமாக கிடக்கும் தாயின் மார்பில் பால் குடித்தவன். சிறுவனான பின்னர் போலீஸ் அதிகாரி ஒருவரால் வன்புணர்வு செய்யப்பட்டவன். கஞ்சா தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டவன். இப்படி பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பணக்காரனாகி விடுகிறான். அப்படி ஆன பின்னர் இவனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

எந்த ஒரு நடிகரும் நடிக்க தயங்கும் கதாப்பாத்திரத்தில் தைரியமாகவும் மிகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார் பார்த்திபன். இவரின் இயழ்பான நடிப்பும் வசன உச்சரிப்பும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நமக்கு மீண்டும் ஒரு முறை அடையாளம் காட்டுகிறது.

கதைக்கு நாயகியாக வரும் வரலட்சுமி சரத்குமார், போலி சாமிரான ரோபோ சங்கர், 18 வயதில் நந்துவாக வரும் சந்துரு, 30 வயது தந்துவாக வரும் ஆனந்த கிருஷ்ணன் அறிமுக நடிகை சினேகா குமார் மற்றும் சாய் பிரியங்கா ரூத் சிறப்பான நடிப்பு.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்தின் மிகப்பெரிய பலம் குறிப்பாக பாவம் செய்யாதே மனமே அதற்கு சாட்சி. பின்னணி இசை நம் மனதை கட்டிப்போடுகிறது அதுதான் இசைப்புயலின் வசீகர இசை.

ஆர்தர் வில்சனின் கேமரா காட்சிகளை மிக அழகாக காட்டியுள்ளது. கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.ஆர்.பார்த்திபன் ராதாகிருஷ்ணன். இது போன்ற படங்களை கொடுக்க இன்னோரு பார்த்திபன் வரவேண்டும். படத்தில் இடம்பெறும் கெட்ட வசனங்கள், பின்பக்கத்தை திறந்து காட்ட சொல்லி அடிப்பதும், வக்கிரம் படத்துக்கு திருஷ்டி பரிகாரம் என நினத்து இப்படத்தை பார்த்தால் இந்த இரவின் நிழல் ஒரு உலக சாதனை படமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் சினிமாவில் இப்படியொரு சிங்கிள் ஷாட் திரைப்படத்தை எடுக்க முடியும் என நம்பியதற்காகவே அவரின் கைகளில் முத்தமிட்டு பாராட்ட வேண்டும் இந்த தமிழ் சினிமா உலகம் !
Iravin Nizhal Movie Review By – Cinetimee

[wp-review id=”43187″]