Connect with us
 

News

ரஜினி நடிக்கும் 171 படத்தை இயக்கப்போகிறாரா லோகேஷ் கனகராஜ் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்ப்டம் ஜெயிலர். ரஜினியுடன் இப்படத்தில் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணனன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து மகள் ஜஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்கள் ரஜினி. இப்படங்களை முடித்த பின்னர் ஜெய்ப்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.