News

அட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

Published

on

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலெயே சிறந்த இயக்குனர் என்று முத்திரையும் பதித்தார். அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார்.

பிகில் படத்தையடுத்து வேறு எந்த தமிழ் படத்தையும் இயக்கவில்லை. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வருடத்தின் இறுதியில் இபப்டத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளாது. இது நாள் வரை பாலிவுட் படங்களில் நடித்திராத நயன்தாரா இந்த படம் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகம் கொடுப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நயன்தாரா இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜாராணி, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version