News
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்ததா?

அஜித் குமார் நடித்துள்ள வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
உலக அளவிலான தியேட்டர் உரிமை, ஓ.டி.டி தள டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
படத்தில் அஜித் தோன்றும் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் அனைத்து உரிமைகளும் பெரிய தொகைக்கு விற்பணையாகிருப்பதாக வெளியான தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜூமா குரேஷி நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க இயக்குநர் எச்.வினோத் இயக்கிவருகிறார். போனி கபூர் இப்படத்தி தயாரித்துள்ளார்.
இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைய இறுதிக்கட்ட சண்டைக்காட்சி மட்டுமே படமாக்கவேண்டும். இதை படமாக்க அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.