News

கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் நதியா?

Published

on

மலையாளாத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் – கவுதமி ஆகியோர் நடிப்பில் வெளியானது இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிவிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லால் – மீனாவை வைத்து இயக்கிய ஜீத்து ஜோசப் தெலுங்கில் வெங்கடேஷ் – மீனாவை வைத்து இயக்கினார். ஆனால் தமிழில் பாபநாசம்2 படத்தை கமலை வைத்து ஜீத்து ஜோசப் எப்போது இயக்குவார் என்கிற கேள்வி தமிழ் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்தியன் 2 மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தையடுத்து கமல் கைவசம் பல படங்கள் உள்ளது. இருப்பினும் பாபநாசம்2 படத்தில் கமல் நடிக்கப்போகிறார் என்றுதான் கூறப்படுகிறது.

பாபநாசம்2 பாடத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நதியா நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அப்படி சேர்ந்து நடித்தால் நதியா – கமல் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதானாம்.

Trending

Exit mobile version