News

தளபதி பற்றி ஒரே வார்த்தையில் சொல்வது கஷ்டம் – பூஜா ஹெக்டே !

Published

on

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் சரியான வாய்ப்பு தமிழில் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். முகமூடி படத்துக்கு பின்னர் தற்போது தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பிறந்த நாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் பேசினால். அப்போது அதில் ஒரு ரசிகர் தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தை என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய பூஜா ஹெக்டே விஜய் பற்றி பதில் கூற ஒரு வார்த்தை போதாது ஆனாலும் முயற்சி செய்கிறேன் இனிமையானவர் என்று கூறினார்.

பீஸ்ட் திரைப்படம் பொங்கள் திருநாளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தவிர பூஜா ஹெக்டே ஆச்சார்யா, சர்க்கஸ், பைஜான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version