News
தனுஷ் படத்தில் நடிக்க வேண்டும் என் கனவு அது – துஷாரா !

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சார்பட்ட பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் துஷாரா விஜயன்.
அண்மையில் துஷாரா அளித்த பேட்டியில் தனுஷ்டன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு வரும் புது முக நடிகைகள் ரஜினியுடன் நடிக்க வேண்டும் அதுதான் எங்களின் கனவு என்று கூறுவார்கள். அதன் பின்னர் வந்த நடிகைகள் அஜித் மற்றும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பார்கள். தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறியுள்ளாது என்றுதான் கூற வேண்டும்.
தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த போதே தனுஷ்டன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று கூறி வீடியோ வெளியிட்டார் நடிகை மாளவிகா மோகனன். அவரின் அந்த ஆசை போலவே டி43 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
தற்போது துஷாராவும் அதேதான் கூறியுள்ளார். தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் அதுதான் எனது பெரும் கனவு. துஷாரா கனவு தனுஷின் அடுத்த படத்தில் நிறைவேறுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.