News

முதல் காதல் முறிந்து 5 வருடம் ஆகிறது அடுத்த காதலுக்கக காத்திருக்கிறேன் – ரைசா வில்சன் !

Published

on

நடிகை ரைசா வில்சன் மாடல் அழகியாக தன் வாழ்க்கையை தொடங்கியவர். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னத் திரைபப்டங்களில் நடிக்க ஆரம்பித்தார். பியார்பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். தற்போது எப்.ஐ.ஆர். காதலிக்க யாருமில்லை, அலிஸ், தி சேஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்கிறோம். ரைசாவும் அதே போலதான் வீட்டுக்குள் அடைபட்டு இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் நேரலை மூலம் ரசிகர்கலுடன் உரையாடியும் வருகிறார். அப்போது இவரின் ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களின் வாழ்க்கையில் காதல் தோல்வி அனுபவம் உண்டா? என கேட்க அதற்கு ரைசா மிகவும் கூலாகா ஆமாம். அது நடந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது என்று கூறினார்.

மேலும் அடுத்த காதலுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version