News

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் விதமாக படம் இருக்கும் – கார்த்திக் சுப்புராஜ் !

Published

on

கடந்த இரண்டு வருடமாக தனுசுக்கு வெற்றிதிரை. 2019-ல் வெளியான அசுரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த கர்ணன் ஆகிய படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன.

அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜகமே தந்திரம் வெளிவருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் அடிதடிக்கு அஞ்சாத வீரராக நடித்திருக்கிறார்.

தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ச் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ பீட்டர் என்ற கதாப்பாத்திரத்திலும் ஜோஜூ ஜார்ச் சிவதாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருப்பார்கள் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்:- இது லண்டனில் நடக்கும் கதை கதாநாயகன் மதுரையிலிருந்து லண்டன் செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் நிகழ்வுகள்தான் படத்தின் ஒட்டுமொத்தக்கதை.

இப்படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை என்றும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சிகள் இருக்கும் என்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

வரும் 18-ம் தேதி ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகமெங்கும் 12 மொழிகளில் முதல் முறையாக பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Trending

Exit mobile version