News

மக்களால் அதிகம் தேடிய திரைப்பட வருசையில் ஜெய் பீம் முதலிடம் !

Published

on

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் ஒ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் பல அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து பல விதமான விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் இந்த வருடத்தில் கூகிளில் அதிக மக்களால் தேடப்பட்ட டாப் 10 படங்களில் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தை ஜெய்பீம் படம் பிடித்துள்ளது. 6-வது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் உள்ளது.

Trending

Exit mobile version