News
தமிழகத்தில் ஜெயிலர் முதல் நாள் வசூல் விபரம் !

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. அதிகாலை காட்சிகள் இல்லாத முதல் ரஜினி படம் இது என்றாலும் தமிழகம் முழுவதுமே ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். சுமார் 2 வருடங்களுக்கு பின்னர் வெளியாகும் ரஜினி படம் இருவாகும்.
உலகம் முழுவதும் 7000 திரைகளிலும் தமிழகம் முழுவதும் சுமா 1200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காவே உருவாக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் அடுத்த புதன் கிழமை வரை அரசு விடுமுறை இருப்பதாலும் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகலாம் என தெரிகிறது.