Reviews
ஜெயிலர் – விமர்சனம் !
Cast: Rajinikanth, Ramya Krishnan, Vinayakan, Mirnaa Menon, Vasanth Ravi, Tamannaah, Mohan Lal, Jackie Shroff, Shiva Rajkumar, Sunil, Yogi Babu
Production: Sun Pictures
Director: Nelson
Screenplay: Nelson
Cinematography
Editing: R. Nirmal
Music: Anirudh
Language: Tamil
Runtime:
Release Date: 10 August 2023
திகார் சிறைச்சாலையில் ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற ரஜினி அதன் பின்னர் மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்ணா மேனன் பேரன் ரித்விக் இவர்களுடன் அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
தன் மகனான வசந்த் ரவியை ஒரு நேர்மையான அதிகாரியாக வளர்ந்து போலீஸ் வேலையிலும் சேர்த்து விடுகிரார். உதவி கமிஷனராக இருக்கும் வசந்த் ரவி சிலை கடத்தல் வேலையை செய்யு விநாயகம் அடியாளான சரவணனை கைது செய்து விசாரிக்க இதனால் கோபமடைந்த விநாயகம் வசந்த் ரவியை கடத்தி கொலை செய்து விடுகிறார். இதனால் கடும் கோபமடையும் ரஜினி தன் மகனை கொலை செய்தவர்களை பழி வாங்கி தன் கோபத்தை தீர்த்துக்கொள்கிறார். அதன் பின்னர் விநாயகம் ரஜினி குடும்பத்தையே கொலை செய்வேன் என சவால் விடுகிறார். தன் குடும்பத்தினரை காப்பாற்றும் முயற்சியில் ரஜினி இறன்குகிறார் இறுதியாக என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் ரஜினி ரசிகர்களை ஆர்ப்பரிக்கும் விதமாக காட்சிகளை உருவாக்கி உள்ளார் நெல்சன். கடந்த சில வருடங்களாகவே ரஜினி ரசிகர்களை முழு திருப்திப்படுத்தும் திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால் இந்த ப்டம் அந்தக் குறையை நீக்கி விட்டது. படத்தின் ஆரம்பத்தில் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கும் ரஜினி மகனை காணவிலை என்றதும் கோதாவில் இறங்கி சம்பவம் செய்யும் காட்சிகள் எல்லாம் அதகளம் செய்கிறார் ரஜினி. பிளாஷ்பேக் காட்சிகள் 10 நிமிடம் மட்டுமே வந்தாலும் இளமையான ரஜினியாக அதிரடி மாஸ் காட்டுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் வரும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாகி ஷெராப் ரஜினிகாந்த் நண்பளாக மிக சரியாக பயன்படுத்தியுள்ளார் நெல்சன்.
படத்தின் முதல் பாதியில் கலகலப்பாக படத்தை நகர்த்தி செல்கிறார். குறிப்பாக ரஜினிக்கும் இவருக்கும் இடையே வரும் காமெடி காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் தெலுங்கு நடிகர் சுனில் காமெடி என்ற பெயரில் நம்மை கடுப்பேத்துகிறார் மை லார்ட்.
ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்ணா, மாஸ்டர் ரித்விக் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள்.
படத்தின் வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயக் இரக்கம் இல்லாமல் கொலை செய்வது, சிலை கடத்துவது என மிரட்டுகிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் தெறிக்க விடுகிறார்.
முதல் பாதி முழுவதும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் செல்லும் திரைப்படம் இடைவேளைக்கு பின்னர் நம் பொறுமையை கொஞ்சம் சோதித்து விடுகிறது.
மொத்தத்தில் ‘ஜெயிலர்’ தர்பார், அண்ணாத்த திரைபடங்களின் மாபெரும் தோல்விக்கு இப்படம் ஒரு வெற்றி மருந்தாக ரஜினி ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.