Connect with us
 

News

ஆகஸ்ட் 2 திரையரங்குகளில் வெளியாகிறது ஜமா !

Published

on

அறிமுக இயக்குநரான பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஜமா. கூலாங்கள் படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெருக்கூத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ணா தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து பலர் நடித்துள்ளனர்.

இது போன்ற தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பேசும் கதையைக் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவதில்லை பெரிதாக. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை பார்வையாளர்களை கவர்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது.

இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் ஆக்ஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.