Reviews

ஜமா – விமர்சனம் !

Published

on

Cast: Pari Elavazhagan, Chetan, Ammu Abhirami, Sri Krishna Dayal, K.V.N Manimegalai, Kaala Kumar, Vasanth Marimuthu, Jesuraj, S.Sarathi Krishnan, Siva Maran, A.K. Elavazhagan
Production: Ssbv Learn And Teach Production Private Limited
Director: Pari Elavazhagan
Cinematography: Gopal Krishna
Editing: Partha M A
Music:Isaignani llayaraja
Language: Tamil
Runtime: 2H 13M
Release Date: 2 August 2024

 

தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து பற்றி படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெளிவருவதில்லை. அப்படி வெளிவந்த சில படங்கள் மட்டுமே தெருக்கூத்து கலையை மிக சரியான முறையில் பதிவும் செய்கின்றன. இப்படிப்பட்ட படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்று கேட்டால் கேள்விக்குறிதான். ஆனால் பல வருடங்கள் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நீங்காத படமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் இந்த ஜமா என்கிற திரைப்படம்.

தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் தெருக்குத்து களை மிகவும் பெருமையாகவும் பிரபலமானதாகவும் இருக்கிறது. அங்கு நடக்கும் கோவில் திருவிழாக்கள் என்றால் தெருக்கூத்து இல்லாமல் பார்க்கவே முடியாது.

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கொண்டா பட்டு என்ற ஊரில் ஒரு ஜமா வைத்து இருக்கிறார் நடிகர் சேத்தன். அங்கு பெண் வேடம் மட்டுமே போட்டு நடிப்பவர் படத்தின் நாயகன் பாரி இளவழகன். பெண் வேடம் போடுபவர்கள் பெண்களைப் போலவே கூந்தல் வளர்த்திருப்பார்கள். அப்படி பெண் வேடம் ஏற்று நடிப்பதால் சற்று பெண் தன்மையும் கலந்து இருக்கும். இந்த ஒரு காரணத்தால் பாரிக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். பாரிக்கு ஒரு நாள் ஒரு ஆசை வருகிறது அந்த ஜமாவில் மகாபாரதம் கூத்தில் அர்ஜூனன் வேடம் ஏற்று நடிக்க வேண்டும் என்று. இதற்கு இடையில் பாரி வேலை செய்யும் ஜமாவின் முதலாளியான சேத்தனின் மகள் அம்மு அபிராமியை காதலிக்கிறார். இதனை அறிந்து கொண்ட சேத்தன் தன் மகளை காதலிக்கும் கோவத்தில் அர்ஜுனன் வேடம் போட விடாமல் பல இடையூறுகளை கொடுக்கிறார். அத்தனை இடையூறுகளையும் தாண்டி அர்ஜுனன் வேடம் போட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பாரி இளவழகன் தெருக்கூத்தில் பெண் வேடம் போடுபவர் இவர்களுக்கு ஒரு உடல் மொழி உண்டு. அந்த அசைவுகள் பெண்ணியத்துடன் இருக்கும். குறிப்பாக இவர்கள் நடை, பேச்சு என அனைத்திலும். அதை எல்லாம் தன் ஆகச்சிறந்த நடிப்பால் அப்படியே திரையில் கொண்டு வந்து இருக்கிறார் பாரி இளவழகன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு அறிமுக நாயகன் இப்படி நடிப்பது ஆச்சர்யத்தை கண்டிப்பாக கொடுக்கிறது.

சேத்தன் தன்னை அவமானப்படுத்தும் காட்சிகளிலும் சரி, காதலை சொல்லி கட்டாயப்படுத்தும் அம்மு அபிராமியை சபாளிப்பது, அம்மா ஆசைப்படுவதை என்னால் செய்ய முடியவில்லையே என கோவப்படுவது, தன் நிலையை நினைத்து அழுவது என அனைத்து காட்சிகளிலும் அப்ளாஸ் பெறுகிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் திரையரங்கில் அனைவருமே கைதட்டி கொண்டாடினார்கள் அப்படி ஒரு நடிப்பு.

சேத்தன் ஒரு தெருக்கூத்து வாத்தியார் எப்படி ஒரு ஜாமாவை நடத்துவார் அப்படியே இருக்கிறார். கண்டிப்பாக இது போன கதாப்பாத்திரங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு முறைதான் ஒரு நடிகனுக்கு கிடைக்கும் அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக வெளிக்காட்டியுள்ளார்.

அம்மு அபிராமி பார் இளவழகனை விரட்டி விரட்டி காதலிக்கும் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். பாரியின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை மணிமேகலை அப்பாவாக நடித்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ண தயாள் மற்றும் நண்பர்களாக வரும் வசந்த் மாரிமுத்து ஆகியோர் நிறைவான நடிப்பு.

இசைஞானி படத்தில் பல உருக்கமான காட்சிகள் உள்ளன அவற்றை எல்லாம் தன் இசையால் மேலும் உருக வைத்துள்ளார். அதிலும் ‘ நீ இருக்கும் உசரத்துக்கு பாடல் படம் முடிந்தும் மனதுக்குள் கேட்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகொண்டா பட்டு கிராம தெருக்கூத்து அழகினை அதிலும் இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் கோபால் கிருஷ்ணா.

மொத்தத்தில் ‘ஜமா’ தங்க கிரீடம் கொடுக்க வேண்டிய திரைப்படம்.

Rating : 4/5

 

Trending

Exit mobile version