டாக்டர் சதீஷ்குமார் ரிப்போர்ட்டராக மிருணாளினி ரவியும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் இருவருக்கும் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இப்படி இருக்க ஒரு நாள் சதீஷ்குமார் காரில் செல்லும் போது வானத்திலிருந்து ஒரு எரிக்கல் பூமியில் விழுவதை பார்க்கிறார். அந்த கல்தான் காலத்தை சரி செய்ய பயன்படும் டைம்லூம். அதில் தெரியாமல் சென்று சிக்கியும் கொள்கிறார் சதீஷ் குமார். அதாவது இவரின் வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது.
இந்தநிலையில் சதீஷ் குமாரின் மனைவியான மிருணாளினி ரவியை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். இதை கண்டுபிடிக்கும் சதீஷ்குமார் டைம்லூப் மூலம் அந்த கொலையை தடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சதீஷ்குமார் தனது மனைவி மிருணாளினியை காப்பாற்றினாரா? இல்லையா அந்த டைம் லூப்பிலிருந்து மீண்டு வந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார் நான் புதுமுகம் இல்லை என்று ரசிகர்களுக்கு தெரியாத அளவிற்கு நடித்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த கதையும் இவரை நடக்கிறது என்பதை நன்கி உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக வரும் மிருணாளினி தைரியமான ஒரு பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார்.
இவர்களை தவிர விஞ்சானியாக வரும் வேலுபிரபாகர் போலீஸ் அதிகாரியாக வரும் கருணாகரன் ரசிக்கும் படியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இது போன்ற ஒரு கதைக்கு திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் கடீனமான ஒன்றாகத்தான் இருக்கும் அதை மிகவும் ஈஸியாக அமைந்துள்ளார்.
Cinetimee
இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே வரும் டைம் லூப் என்ற கதையை தமிழில் கையிலெடுத்துள்ள இயக்குனர் மனோ கார்த்திகேயன் படத்தின் முதல் பாதி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத அளாவிற்கு திரைக்கதையை அமைந்துள்ளார். ஆனாலும் படத்தின் இரண்டாம் பாதியில் அத்தனை குழப்பத்திற்கும் தெளிவான விளக்கத்தையும் கொடுக்கிறார்.
படத்தில் மைனஸ் என்று சொல்ல போனால் படத்தில் டப்பிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். டப்பிங் குரல்கள் முன்னுக்கு பின்னாக வருகிறது அதை படக்குழுவே கவனிக்க தவறிவிட்டது.
ஜிப்ரானில் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. கார்த்திக் கே தில்லை அவர்களின் ஒளிப்பதிவு அட்டகாசமாக உள்ளது.