News

பாடகியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதா ஜெயம் ரவி விளக்கம் !

Published

on

நடிகர் ஜெயம் ரவி தன் காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஆர்த்தி இந்த முடிவு என்னை கேக்காமல் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஆர்த்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸுக்கும் பழக்கம் இருப்பதுதான் ஆர்த்தியை பிரிய முக்கிய காரணம் என்று இணையத்தில் வதந்திகள் பரவி நிலையில் இதற்கு ஜெயம் ரவி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நான் எடுத்த இந்த விவாகரத்து முடிவு ஆர்த்திக்கு தெரியாத என்பது உண்மை இல்லை. அவருக்கு முன்னதாக இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஆர்த்தி தரப்பில் நான் பேசியும் இருக்கிறேன்.

இப்படி இருக்கையில் எனக்கு இது பற்றி தெரியாது என்று ஆர்த்தி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. என் பிள்ளைகளுக்காக அமைதியாகவும் சட்டரீதியாகவும் செல்கிறேன். அத்துடன் என்னை பாடகியுடன் தொடர்பு படுத்தி பேசுவது பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலாஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.

என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறு என்று கூறினார்.

 

 

 

Trending

Exit mobile version