News

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி !

Published

on

மணிரத்னம் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். இந்த படத்திற்காகத்தான் தானி வைத்த கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.

இப்படத்தை தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப்போகிறார்.

இந்த படம் ஜெயம் ரவியின் 30-வது திரைப்படமாகும். காதல் மற்றும் காமெடி கலந்த கதைகளைத்தான் இது வரையிலும் இயக்கி வந்துள்ளார் இயக்குநர் ராஜேஷ். முதல் முறையாக ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் இப்படத்தை குடும்ப கதையம்சம் கொண்ட படமாக உருவாக்கப்போகிறாராம். அடுத்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாம்.

Trending

Exit mobile version