Connect with us
 

News

ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரின் கூட்டணியில் பூலோகம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அகிலன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக தான்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் வெகு நாட்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் வெளியீடு மார்ச் 10-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.