News
வெளியீட்டுக்கு முன்னரே பல கோடி லாபம் பார்த்த ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி !

அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் திரைப்படம் ஜீனி. இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்ட நடித்து வருகிறார்கள்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படம்தான் ஜெயம்ரவியின் அதிக பட்ஜெட் படமென்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் வெளியீட்டுக்கு முந்தைய விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜீனி திரைப்படம் திரையரங்க உரிமைகளை தவிர்த்து ஏற்கனவே ரூ.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.