News

ஆகஸ்ட் 25-ம் 4 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவியின் இறைவன் !

Published

on

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் அஹமத் இயக்கியுள்ள இறைவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தனி ஒருவன் படத்திற்கு பின்னர் இருவரும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகள் நடைபெற்றது. இப்படத்தை தவிர ஜெயம் ரவி சைரன். ஜெ.ஆர் 30 படங்களில் நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version