News
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா – அர்ஜுன் நடிக்கும் அகத்தியா !

பாடலாசியர், பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியா.
சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையுடன் வரலாற்று பின்னணியில் இப்படம் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஜசரி கணேஷ் சார்பாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
மிக நீண்ட நாட்களாக இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை படக்குழு.