Connect with us
 

Reviews

ஜீவி 2 – திரைவிமர்சனம்

Published

on

Movie Details

இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜீவி. அப்படத்தின் தொடர்ச்சியாக சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று ஓடிடி தளமான ஆஹாவில் வெளியாவிருக்கும் திரைப்படம் Jiivi 2.

Jiivi 2 கதை உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கண்டிப்பாக இதன் முதல் பாகத்தை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும்.இந்த இரண்டாம் பாகம் ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் பாகத்தின் சுருக்கத்தை சொல்லி விட்டு படம் ஆரம்பமாகிறது.

திருமணம் ஆன பின்னர் ஹீரோ வெற்றி மனைவி என சந்தோஷமாக இருக்கிறார். அதே சமயம் தன் நண்பன் கருணாகரனுடன் மீண்டும் சமாதனம் ஆகிறார். ஒரு நாள் தன் வீட்டிற்கு சாப்பிட வர சொல்லி விட்டு கருணாகரனிடம் ஒரு உண்மை சொல்கிறார். என் மனைவிக்கு கண் பார்வை வர ஒரு ஆப்ரேஷன் செய்ய போகிறேன் அதற்காக இந்த வீட்டை அடகு வைக்கப்போவதாகவும் இது நாள் வரை நாம் சம்பாதித்ததில் ஒரு லட்சம் பணம் வைத்திருக்கிறேன் அதை வைத்து ஒரு கார் எடுத்து ஓட்ட போகிறேன் என கூறுகிறார். அதே சமயம் கருணாகருக்கு டீ கடை ஒன்றையும் வைத்து கொடுக்கிறார் வெற்றி.

வெற்றியின் மாமா மைமம் கோபியை யாரோ ஒரு கும்பல் கொலை செய்ய விரட்ட அவர்களிடம் சண்டை போட்டு காப்பாற்றுகிறார். ஏன் கொலை செய்ய வந்தார்கள் என்று கேட்க இந்த வீட்டை வைத்து ஒரு கோடிக்கு அடகு வைத்து தொழில் தொடங்கினேன் அது நஷ்டமானதால் வீட்டை கொடுக்கும்படி என்னை கொலை செய்ய விரட்டுகிறார் என்று சொல்ல வெற்றிக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

அதே சமயம் வெற்றி தன் நண்பன் வீட்டில் நகைகளை திருடுகிறார். அந்த நண்பனை யாரொ கொலை செய்தும் விட போலீஸ் இந்த கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறது.

அதே சமயம் அந்த முக்கோன வடிவ விதி வெற்றின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் என்ன நடந்தது அந்த கொலையை செய்தது யார் இவரின் முக்கோன வாழ்க்கை விதி விளையாட்டு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் சுவாரஸ்சிகமாக இருக்கும் என்று நினைத்து இப்படத்தை பார்த்தால் அது சற்று ஏமாற்றமே நமக்கு. படத்தின் இறுதியில் 30 நிமிடம் கொடுத்த அந்த விறுவிறுப்பை படம் முழுவதும் கொடுத்திருந்தால் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும்.

வெற்றி கண் பார்வையற்ற தன் மனைவி மீது அதிக பாடம் கொண்டவராகவும் நண்பன் கருணாகரன் மீது அதிக நட்பு கொண்டவராகவும் நன்றாக நடித்துள்ளார். இதுவரை வெளிவந்த படங்களை விட இப்படத்தில் முக பாவனையில் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வெற்றி – கருணாகரனின் பணக்கார நண்பனாக வரும் ஒருவரை இந்த பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அவரை வைத்துதான் இப்படமே ஆரம்பமாகிறது.
முதல் பாகத்தில் வந்த ரோகினி மற்றும் மைம் கோபி ஆகிய இருவருமே இந்த பாகத்திலும் உள்ளனர். இருவருக்குமே அழுத்தமான கதாப்பாத்திரம்தான்.

அதே போல இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ஜவஹர் நடிகர் நாசரின் தம்பி. இவரின் நடிப்பும் கண்டிப்பாக ரசிக்க வைக்கிறது.முதல் பாகம் தொடக்கமே இருக்கை நுனியில் நம்மை அமர வைத்து படம் பார்க்க வைத்தது ஆனால் இரண்டாம் பாகம் அதை முழுவதுமாக கொடுக்க தவிறி விட்டது.

முதல் ஒரு மணி நேரம் ஏதோ போக்கில் போகும் கதை அடுத்த 50 நிமிடங்களில் நம்மை விறுவிறுப்பு என்ற வட்டத்துக்குள் கொண்டு செல்கிறது அதை படம் முழுவதுமாக கொடுத்திருந்தால். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பேசப்பட்டிருக்கும்.
Jiivi Review By Cine Timee

[wp-review id=”43675″]

Continue Reading