News

11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த உண்மைக்கதை ஜோதி !

Published

on

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான Jothi திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இப் படத்தை பற்றி தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி” கூறியதாவது.

சதுரங்க வேட்டை படத்தொகுப்பாளராகிய நான் இந்த படத்தை தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சதுரங்க வேட்டை படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது, அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை.இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்று கூறினார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது.

சமூக அக்கறைகொண்ட கதை கருவை விறுவிறுப்பான திரைக்கதையுடனும்,எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்ட “ஜோதி ” திரைப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக வந்திருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலாகிய போவதெங்கே பாடலை மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையில்காணும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

இப்படத்தைப் பற்றி நடிகை “ஷீலா ராஜ்குமார்” கூறியதாவது

முழு ஜோதி படத்தையும் நா பாத்தது இல்ல, இப்பதான் ஃபஸ்ட் டைமா படத்தோட ஃபஸ்ட் பத்து நிமிஷம் பாக்குறேன். ஸ்கிரிப்ட்ல என்ன இருந்ததோ அதைவிட விஷூவலா பாக்கறப்ப ரொம்ப நல்லா வந்திருக்கு, உடனே முழு படமும் பாக்கணும் போல இருக்கு, AV கிருஷ்ண பரமாத்மா ரொம்ப நல்லா இயக்கிய இருக்காரு.ஜோதி படத்துல எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் மிக்க நன்றி என கூறினார்.

Trending

Exit mobile version