SPR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜாசேதுபதி தயாரிப்பில் கிருஷ்ணாபரமாத்மா இயக்கத்தில் வெற்றி ஷீலா நடிப்பில் உருவாகியுள்ள படம் Jothi.
ராட்சசன் பட நடிகர் சரவணன் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் அவரது மனைவி ஷீலா நிறைமாத கர்ப்பிணி , ஒருநாள் இரவு அவசர அழைப்பு காரணமாக தனது நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை தனியாக விட்டு சரவணன் வெளிய செல்கிறார்.
அந்தநேரத்தை பயன்படுத்தி ஒரு மர்ம நபர் ஷீலாவின் வயிற்றில் உள்ள குழந்தையை வயிற்றை கிழித்தி கடத்தி செல்கிறார் , மயக்கமான நிலையில் இருக்கும் ஷீலாவை பார்த்து எதிர் வீட்டில் இருக்கும் ஓடோடி வந்து கதறி அழுகிறார் கிரிஷா உடனே அந்த பகுதியின் காவல்துறையில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டரான வெற்றிக்கு போன் செய்து விஷயத்தை தெரியப்படுத்கிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வெற்றி ஷீலாவை மருத்துவமனையில் சேர்த்து அதன்பின்னர் அந்த குழந்தையை கடத்திய மர்ம நபரை தேடும் வேட்டையை ஆரம்பிக்கிறார் அதன் பின்னர் அந்த மர்ம நபரை பிடித்தாரா குழந்தையை மீட்டாரா என மீதி கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
கற்பனை கதைக்களமான தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக உண்மை கதைகள் படமாக்கப்பட்டுவருகிறது அந்த வகையில் குழந்தை கடத்தும் ஒரு கும்பலை மையமா வைத்து சமூகத்தில் நடக்கும் ஒரு பிரச்னையை படமாகியிருக்கும் இயக்குனர் கிருஷ்ணா பரமாத்மாவை இந்த இடத்தில பாராட்டி ஆகவேண்டும்.
கடந்த சிலவருடங்களாக குழந்தை கடத்தல் என்னும் ஒரு நூதன திருட்டு பெருகிவருகிறது வருடத்திற்கு,40,000 குழந்தைகள் காணாமல் போகிறது 11,000 அதில் குழந்தைகளில் கண்டுபுடிக்க முடியாமல் போகிறது என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட்டை நம்மால் இந்த படத்தில் மூலம் அறியமுடிகிறது.
சமீபத்தில் ஒரு மாநிலத்தில் மூன்று மருத்துவமனைகள் இதனால் சீல் வைத்து மூடியுள்ளாரகள் தமிழ் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கூட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது இந்த இடத்தில் பாராட்டியாக வேண்டும் மேலும் பரிட்சயம் இல்லாத நடிகர்களாக இருந்தாலும் படத்தில் நடித்தியிருக்கும் அனைத்து நடிகர்களும் தன் பங்கினை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
எட்டுத்தோட்டக்கள், ஜீவி, C/O காதல், என தொடர் வெற்றி படங்களில் நடித்த வெற்றி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வெற்றி இந்த கதாப்பாத்திரத்துக்கு மிகச் சரியான தேர்வு என்றே கூறலாம். ஆனால் இனி வரும் காலங்களில் இவரின் நடிப்பில் முன்னேற்றம் வேண்டும் குறிப்பாக இவரின் முக பாவனைகளில்.
கதையின் நாயகியாக நடித்துக்கும் நடிகை ஷீலா இவரின் சிறப்பான நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் குறிப்பாக படத்தின் இறுதியில் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் முத்துக்கள்.
ஷீலாவின் அப்பாவாக வரும் மைம் கோபி மகள் மீது பாசத்துடன் நடித்துள்ளார்.ஹர்ஷவர்தன் ராமேஷ்வரின் பின்னணி இசையும் சேஷையாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
வருடத்திற்கு,40,000 குழந்தைகள் காணாமல் போகிறது 11,000 அதில் குழந்தைகளில் கண்டுபுடிக்க முடியாமல் போகிறது என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட்டை நம்மால் இந்த படத்தில் மூலம் அறியமுடிகிறது.
Jothi Review By Cine Time
[wp-review id=”43339″]