News
தனுஷ் சொகுசு கார் வழக்கில் நாளை தீர்ப்பு !

வருட வருட வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அந்த வகையில் லண்டனில் இருந்து இறுக்குமதி செய்த காருக்கு நுழைவு வரிக்கு தடை கோரி நடிகர் தளபதி விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறுக்குமதி செய்யப்பட்ட காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மொத்தமாக ரூபாய்.60.66 லட்சம் நுழைவு வரியின் 50 சதவீதத்தை செலுத்தும்படி தனுஷுக்கு 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தொகையை செலுத்தி தன் காரை பதிவ்ம் செய்து கொண்டார் தனுஷ்.
இந்த நிலையில்தான் இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது தனுஷ் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.