News

ஜூன் 9-விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணமா குழப்பத்தில் ரசிகர்கள் !

Published

on

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகிறார்கள்.

திருமணம் எப்போது என்று பலர் கேள்வி கேட்டு வந்த நிலையில் இவர்களின் திருமணம் ஜூன் 9-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் இந்த திருமணப் பத்திரிக்கையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள். இவர்களின் இந்த திருமணத்தை அதிகாரபூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளார்களாம்.

Trending

Exit mobile version