Reviews

காலங்களில் அவள் வந்தம் – விமர்சனம் !

Published

on

Movie Details

பணக்கார வீட்டு இளைஞன் கவுசிக் ராம் ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என எழுதி வைத்து அதன் படி பெண்களை காதலிக்க முயல்கிறார். அப்படி இவர் காதலை ஹெரோஷினியிடம் காதலை சொல்ல இருக்கும் போது. நாயகனின் நெருங்கிய நண்பரின் மகள் அஞ்சலி நாயர் நாயகன் வீட்டிற்கு வரும் போது நாயகன் மீது காதல் கொள்கிறார்.

ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியை நடத்தி வரும் அஞ்சலி நாயகன் கவுசிக்கை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருவருக்கும் திருமணமும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கவுசிக்கின் பழைய வாழ்க்கை பற்றி அஞ்சலிக்கு தெரிய வர இருவருக்கும் பிரச்சனை வந்து பிரிந்து செல்கிறார்கள். இருதியில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கவுசிக், அஞ்சலி நாயர் இருவருமே உண்மையாகவே காதலிப்பவர்கள் போல சின்ன சின்ன முக பாவனைகள் மூலம் சிறப்பான ஒரு நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். காதல், மோகம், தவிப்பு, பிரிவு என அனைத்தையும் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அதே சமயம் நெருக்கமான காட்சிகள் உதட்டுடன் முத்த காட்சிகள் என எல்லை மீறிய காட்சிகளும் படத்தில் உள்ளது.

நாயகனாக வரும் கவுசிக் ராம் இவரின் முதல் படம் என்று நம்ம முடியாத அளவுக்கு உள்ளது. படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரைக்கும் இவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. பெண்கள் பின்னால் சுற்றி திரியும் ஒரு இளைஞன் என்ன என்ன செய்வானோ அதை எல்லாம் ரசனையுடன் செய்யுள்ளார். இந்த காலத்து 90ஸ், 2கே கிட்ஸ்களின் கதலை நம் கண் முன் காட்டுகிறார்.

அஞ்சலி நாயர் இவரின் முந்தைய படங்களான நெடுநல்வாடை, டாணாக்காரன் படங்களை விட இவரின் முழு நடிப்பை காட்ட இப்படம் ஒரு சரியான திரைப்படம். அதை மிகவும் திறம்பட பயன்படுத்தியுள்ளார் என்றே கூறவேண்டும்.

இரண்டாம் நாயகியாக வரும் ஹெரோஷினி சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் இவரின் உண்மைக் காதல் என்ன என்பதை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரியின் பின்னணி இசை ஒரு காதல் படத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் விருப்புவார்களோ அப்படி உள்ளது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவும், லியோ ஜான் பால் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு வசந்த காலத்தை அற்புதமாக காட்டுகிறது.

இடைவேளை வரைக்கும் நன்றாக போகும் படம் இடைவேளைக்கு பின்னர் கொஞ்சம் தொய்வை நமக்கு ஏற்படுத்துகிறது. படத்தின் கிளைமாக்ஸ் அருமையான ஒரு சுவாரசியத்து கொடுக்கிறது நமக்கு.

கண்டிப்பாக படம் முடிந்தவுடன் நம் மனதில் பீல் குட் மூவி என்று தோன்றுகிறது அப்படியான ஒரு சிறப்பான படம்தான் இந்த காலங்களில் அவள் வசந்தம்.Kaalangalil Aval Vasantham By Vidya Chandrababu

[wp-review id=”44421″]

Trending

Exit mobile version