பிறந்த நாள் முதல் அதிஷ்டம் என்ற ஒன்று இல்லாத குழந்தையாக வளர்கிறார் விஜய்சேதுபதி. மழை பெய்து அனைவரும் நணையும் போது இவர் போய் நின்றால் மட்டும் மழை நின்று விடும். இவர் வாழ்க்கையில் ஆசைப்பட்டு கேட்கும் எதுவுமே கிடைக்காது. பகலில் ஓலா கார் ஓட்டுநராகவும் இரவுல் கிளப் பவுன்சர் வேலை பார்த்து வருகிறார் விஜய்சேதுபதி.
இப்பிடி எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் போகும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் ஒரு விநாயகர் சதுர்த்தி நாளென்று பகலில் நயன்தாராவையும் அதே நாள் இரவு சமந்தாவையும் சந்திக்கிறார் விஜய்சேதுபதி. இப்பிடி போகும் இவரின் வாழ்க்கையில் ஒரே நாளில் இருவரும் விஜய்சேதுபதியை காதலிப்பதாக சொல்ல அதை ஏற்றுக்கொண்டு இருவருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார். ஒரு நிலையில் இவர் ஒரே நேரத்தில் இருவரையும் காதலிப்பது இரு நாயகிகளுக்கும் தெரிய வர பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
அதிஷ்டம் இல்லாதவன் என்று ஊரே முத்திரை குத்தி விடப்பட்ட ஒருவராக விஜய்சேதுபதி அந்த சோகத்தை கூட மிக எளிதாக எடுத்துக்கொண்டு இருக்கும் இளைஞராக சிறப்பான நடிப்பு. அதே போல இப்படிப்பட்ட ஒருவனுக்கு இரு பெண்கள் காதலிக்கிறார்கள் அவர்கள் மூலம் எனக்கு நல்ல அதிஷ்டம் கிடைத்து விட்டது என்று நம்பி இவர் செய்யும் அனைத்துமே ரசிக்கலாம்.
காதல் கதையம்சம் கொண்ட கதைகளை வித்தியாசமாக கையாள்வதில் பெயர் போனவர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் இந்தப்படத்திலும் பூந்து விளையாடி உள்ளார். சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் சுவாரசியமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
சமந்தாவை முதல் முதலில் சந்திக்கும் காட்சி, நயன்தாராவை முதன் முதலில் சந்திக்கும் காட்சிகள் என ஒவ்வொன்றும் அழகாய் உள்ளது. சமந்தாவும், நயன்தாராவும் அழகிலும் சரி நடிப்பிலும் சரி போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் பங்காற்றி உள்ளனர். மாடர்ன் உடையில் சமந்தாவும், சேரியில் நயன்தாராவும் பார்க்க அவ்வளவு அழகாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் விஜய் சேதுபதி தனது நடிப்பால் இருவரையும் தூக்கி சாப்பிடுகிறார்.
வசனங்கள் தான் இந்த படத்தை நகர்த்தி கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம், மேலும் காட்சி அமைப்பிலும் விக்னேஷ் சிவன் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.
Cinetimee
படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணமாக இருந்தது. தனது 25வது படத்தில் அனிருத் தனது மொத்த வித்தையையும் இந்த படத்தை இறக்கியுள்ளார்.
படம் மிகவும் நன்றாக இருந்தது. மூன்று மணி நேரம் சென்றதே தெரியவில்லை.நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தது. விடுமுறை நாட்களில் இம்மாதிரியான திரைப்படங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது.
சமந்தாவும் நயன்தாராவும் சேர்ந்து வரும் காட்சிகளில், யாரை பார்ப்பது என்றே தெரியவில்லை. அவ்வளவு அருமையாக இருந்தது இவர்களின் நடிப்பு.
நானும் ரவுடி தானுக்கு அடுத்து விஜய்சேதுபதி, இந்தப் படத்தில் வித்தியாசமான கதையில் நடித்தது மிக நன்றாக இருந்தது .