Connect with us
 

News

காஜல் அகர்வால் விலகல் இந்தியன் 2 படத்தில் இணையும் திரிஷா?

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்தியன் 2. தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தை பாதியில் விட்டுவிட்டு வேறு படத்தை இயக்கதிட்டமிட்டுள்ளார் ஷங்கர். அதன் பின்னர் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது லைக்கா நிறுவனம் பின்னர் இது சம்மந்தமாக மத்திஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது. அதன் பின்னர் நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் தற்போது டிசம்பர் மாதத்திற்கு பின்னர் இந்தியன் 2 பாகம் படப்பிடிப்பு தொடங்க ஆய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆன காஜல் அகர்வால் இப்படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இப்படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிக்க வைக்க திரிஷா மற்றும் சமந்தா ஆகிய இருவருடனும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் திரிஷாதான் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஏற்கனவே காஜல் அகர்வால் இப்படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளாராம். தற்போது புதுதாக வரும் நடிகை அந்த காட்சியையும் சேர்த்து முதலிருந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.