News
மதுபாட்டிலுடன் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால் !

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் கவுதம் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு திருமண நாளை கொண்டாடினார். இந்த நிலையில் காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் கணவருடன் மதுபாட்டிலுடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த படத்தின் கீழ் இந்த பண்டிகையை உங்களுக்கு பிடித்தமானவருடன் பதுமானத்துடன் கொண்டாடுங்கள் தீபாவளி விருந்துக்கு பொருத்தமான மதுபானம் இது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுடன் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அதில் இவர் கையில் சூதாட்டம் ஆடும் சீட்டு கட்டும் உள்ளது. இந்த புகைப்படம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. காஜல் அகர்வால் மதுவை விளப்பரபடுத்தவும் ரசிகர்களை மதுகுடிக்கவும் தூண்டுகிறார் என்று சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகியுள்ளது.
காஜல் அகர்வால் நடித்துள்ள ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் போன்ற படங்களில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.