Connect with us
 

News

இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் !

Published

on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 இதில் கமல்ஹானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று சினிமாவில் நடிக்காமல் சில வருடம் ஒதுங்கியே இருந்தார். இதனால் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்திலிருந்து காஜல் அகர்வால் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்த காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்பன் என விளக்கம் கொடுத்தார். அத்துடன் படத்துக்காக குதிரையேறும் பயிற்சி எடுத்து வரும் வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் இணைந்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளாத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ‘ இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பு இருக்கிறேன். இந்த படம் மிக விரைவில் திரைக்கு வரும்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.