News

இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டாரா காஜல் அகர்வால் !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். திருமணம் ஆனபின்னரும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால். அதன் பின்னர் கதா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிரார்.

அந்த வகையில் கமல்ஹாசனும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியன் 2 படம் பாதியிலே கைவிடப்பட்டது. பின்னர் இரு தரப்பிற்கும் சுமூக பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில்.

இப்படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. காஜல் தற்போது கர்ப்பமாக இருப்பதாக் இப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை அந்த வேடத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version