News

உருவ கேலி செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த காஜல் அகர்வால் !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ‘காஜல் அகர்வால்’ இவர் கடந்த வருடம் தொழிலதிபர் கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்திற்கு சில ரசிகர்கள் உருவ கேலி செய்து பதிவிட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள் எதற்கும் உதவாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், வாழு, வாழவிடு” எனக் குறிப்பிட்டு அறிக்கையை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version