News

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல் ஹாசன் !

Published

on

ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய் அவர்களை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதை தொடர்ந்து தளபதி 65 படத்தையும் அவர்தான் இயக்கவிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட சம்பள பிரச்சனை காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார். மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப பெற வேண்டும் என்று தனது கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடி தேடி கதை சொல்லி வந்தார் ஆனாலும் பலர் இவரின் அந்த கதையில் நடிக்க தயக்கம் காட்டினர்.

இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் கமல்ஹாசனுக்கு ஒரு கதை சொல்லி அதை அவர் நடிக்க சம்மதமும் தெரிவித்துள்ளார். தர்பார் படத்தின் தோல்வியால் பலரும் இவரின் இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டி வந்த நிலையில் கமலை வைத்து இந்த கதையை ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம்.

Trending

Exit mobile version