News
மிரட்டி விட்டீர்கள் கமல்ஹாசன் போன் செய்து பாராட்டிய ரஜினி !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம். தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திரா மற்றும் கேராளவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அது மட்டுமில்லாமல் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்தி வருகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அது மட்டுமில்லாமல் படம் வெளியாகி 2 நாட்களில் ₹100 கோடி வசூலுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில்தான் இப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்து ரசித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு போன் செய்து விக்ரம் படம் மிகவும் அருமையாக உள்ளது கலக்கிட்டிங்க கமல் என்றும் பாராட்டியும் உள்ளார். அது மட்டுமில்லாமல் இயக்குநர் லோகேஷ் கனக்ராஜ் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் போன் செய்து பாராட்டியுள்ளாராம் ரஜினிகாந்த்.